வால்பாறையில் வட்டாட்சியர் தலைமையில் இயற்கை பேரிடர் ஆலோசனை கூட்டம்..!

கோவை: வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இயற்கை பேரிடர் ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், இயற்கை பேரிடர் ஆலோசனை கூட்டம் வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்றது.



கோவை மாவட்டம் வால்பாறை மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும் நிலையில், கடந்த நான்கு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. வால்பாறை சுற்று வட்டார எஸ்டேட் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் அதிகம் சிரமப்பட்டு வருகின்றனர். இயற்கை சீற்றம் பேரிடர் மேலாண்மை குறித்து வால்பாறை வட்டாட்சியர் ராஜன் தலைமையில் அனைத்துத் துறை அதிகாரிகளும் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.



இதில் காவல் துறை ஆய்வாளர் மகேஷ்வரி, தனி வட்டாட்சியர் முத்துக்குமார், சுகாதாரத் துறை மருத்துவர் பாபு லட்சுமணன், நகராட்சித் துறை செல்வராஜ், மின்சாரத் துறை, பொதுப்பணித் துறை, கல்வித் துறை உள்ளிட்ட துறைகளின் அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் வால்பாறை குடியிருப்புப் பகுதி அருகில் இருக்கும் நடுமலை ஆற்றைத் தூர்வார வேண்டும். வெள்ளம் ஏற்படும் பகுதிகளில் பொதுமக்களைப் பாதுகாக்க, வால்பாறை அரசு ஆண்கள் பள்ளியைப் பயன்படுத்த வேண்டும். கன மழையால் மின்சாரம் துண்டிக்காமல் இருக்க மின்சாரத்துறையில் மழைக் காலங்களில் அதிக மின் ஊழியர்கள் வேலைக்கு உள்ளனர். மின் தடைஏற்பட்டால் அதி விரைவில் மின் விநியோகம் செய்யப்படும். வனத்துறை சார்பாக வால்பாறை பொள்ளாச்சி சாலையில் விழும் நிலையில் உள்ள மரங்கள் அகற்ற வேண்டும். மேலும், வீடுகள் அருகில் இருக்கும் மரங்களை அகற்ற வேண்டும் என்று வட்டாட்சியர் தெரிவித்தார்.



வால்பாறை போக்குவரத்து துறையில் மழை தண்ணீர் பேருந்துக்குள் வராமல் சீரமைக்க வேண்டும். பழுதாகக் கூடிய பேருந்தை இயக்க வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும், மழைக் காலங்களில் தண்ணீரை கொதிக்க வைத்துக் குடிக்க வேண்டும். காச்சல், சளி ஏற்பட்டால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் அவசர உதவிக்கு நகராட்சி, காவல் துறை, வட்டாட்சியர் தொலைபேசி எண்ணைப் பயன்படுத்த வேண்டும் என்று ஆலோசனையில் தெரியப்படுத்தினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...