சிங்காநல்லூர் தொகுதியில் அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் ஆய்வு: எம்எல்ஏ ஜெயராம் நடவடிக்கைக்கு மக்கள் வரவேற்பு

கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளான தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய் பிரச்சனை உள்ளிட்டவற்றை தொகுதி எம்எல்ஏவான ஜெயராம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த செயல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


கோவை: சிங்காநல்லூர் தொகுதியில் பொதுமக்களின் அடிப்படை பிரச்சனைகளான தெருவிளக்கு, குடிநீர், சாக்கடை கால்வாய் பிரச்சனை உள்ளிட்டவற்றை தொகுதி எம்எல்ஏவான ஜெயராம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த செயல் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.



சிங்காநல்லூர் அருகே வரதராஜபுரம் பகுதியில் இருந்து நீலிகோணம்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ள குடியிருப்புப் பகுதியில் சாக்கடை கால்வாய் பிரச்சினை மற்றும் தெருவிளக்குகள் சரிவர எரியாதது குறித்து மக்கள் புகார் தெரிவித்த அரைமணி நேரத்தில் அந்தப் பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.



இதேபோல் சிங்காநல்லூர் ஹவுசிங் யூனிட் குடியிருப்பு பகுதியில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக, அங்கு நேரில் சென்று ஆய்வு செய்த எம்எல்ஏ ஜெயராம் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.



மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு உடனடியாக பதில் அளிப்பதுடன் நேரில் வந்து ஆய்வு செய்து மக்கள் பிரச்சினைகளைக் கேட்டறியும் எம்எல்ஏவின் நடவடிக்கைக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.



சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் கொரோனா பெருந்தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன் களப்பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நல உதவிப் பொருட்கள் வழங்குதல் மற்றும் நோய்த் தொற்றைத் தடுக்க கபசுரகுடிநீர், முகக்கவசம் உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதுடன் இஎஸ்ஐ மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்களுக்கு தண்ணீர் பாட்டில், பிஸ்கட், மதிய உணவு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை எம்எல்ஏ ஜெயராம் தொடர்ந்து செய்து வருகிறார்.



நோய்த்தொற்று பரவல் முதல் அலையின் போது பொது மக்களுக்கு உதவும் வகையில் அரிசி உள்ளிட்ட பல்வேறு மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பை சிங்காநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தனது சொந்த செலவில் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்எல்ஏ ஜெயராம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அவரது முகநூல் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பகிரப்பட்டுள்ளன. இதுகுறித்து எம்எல்ஏ ஜெயராம் கூறுகையில், ‘‘வரதராஜபுரம் பகுதியிலிருந்து நீலிகோணம்பாளையம் செல்லும் மெயின் ரோட்டில் அமைந்துள்ள 62வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் சாக்கடை பராமரிப்பு பணியின்போது பழைய ஸ்லாப் கற்கள் உடைந்து உள்ளன. அந்த இடத்தை ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளேன். தவிர, அப்பகுதியில் உள்ள மக்கள் தெருவிளக்குகள் சரியாக எரிவதில்லை என்று புகார் தெரிவித்தனர். அந்த பிரச்சனைக்கும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...