கோவை: கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என வட்டார மருத்துவ அலுவலர் தகவல் தெரிவித்துள்ளார்.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் நல்லட்டிபாளையம், சொக்கனூர், வடசித்தூர் ஆகிய ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், அடிக்கடி கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டு வந்தது. இருந்தாலும் கொரோனா தடுப்பூசி இருப்பு வந்தவுடன் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனடிப்படையில், இன்று நல்லட்டிபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 450-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
இதுவரை கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு இருப்பதாகக் கிணத்துக்கடவு வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் சித்ரா தகவல் தெரிவித்துள்ளார்.