நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியது..!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியுள்ளது. இதன் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் நெய் மிளகாய் சீசன் தொடங்கியுள்ளது. இதன் விலை கிலோவிற்கு 200 ரூபாய் வரை கிடைத்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் சுற்றுப்புற கிராமங்களில் நெய் மிளகாய் சீசன் தற்போது தொடங்கி உள்ளது. குறிப்பாக நீலகிரி, ஏற்காடு, மூணாறு போன்ற மிதவெப்ப காலநிலை நிலவும் பகுதிகளில் ‘நெய்மிளகாய்' அதிகளவில் விளைவிக்கப்படுகிறது. அதிக காரத்தன்மை கொண்ட ‘பூத் ஜலக்கியா' என்ற மிளகாயின் காரத்தன்மையைக் காட்டிலும் கூடுதல் காரம் இருப்பதால், நெய் மிளகாய்க்கு கூடுதல் மவுசு உண்டு.



‘‘குன்னூர் அருகேயுள்ள சோலாடா மட்டம், அளக்கரை பகுதியில் பயிரிடப்படும் இந்த மிளகாயில் மருத்துவ குணம் உள்ளதால், வாயு தொல்லை, முதுகுவலி போன்ற தொந்தரவு உள்ளவர்களுக்கு இவ்வகை மிளகாய் நிவாரணம் அளிப்பதாகக் கூறி, பலர் வாங்க்ச் செல்கின்றனர். இதற்கு தற்போது, கிலோ 200 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. இதன் விளைச்சலை அதிகரிக்க, தோட்டக்கலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுத்தால், கூடுதல் லாபம் கிடைக்கும்” என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...