கோவை: கோவை தெற்குத் தொகுதியில் மநீம கட்சியின் சார்பாக கொரோனா பெருந்தொற்று காலத்தில் 300 குடும்பங்களுக்கு நிவாரணப்பொருட்கள் வழங்கப்பட்டது.

கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மநீம தலைவர் டாக்டர் கமல்ஹாசன் சார்பாக, அந்தத் தொகுதியின் ஒரு பகுதியான கல்லுக்குழியிலும், அருகாமையிலும் நேற்று (16.06.21) நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

300 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மற்றும் மளிகைப் பொருட்களை, மநீம மாநிலச் செயலாளர்கள் மயில்சாமி, முனைவர் அனுஷா ரவி, மூகாம்பிகா, ரங்கநாதன், பங்கஜ், மாவட்டச் செயலாளர்கள் பிரபு, சத்தியநாராயணன் ஆகியோர் தொடங்கி வைக்க, மாநகராட்சி செயலாளர் மணிக்கொடி மற்றும் நிர்வாகிகள் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சி பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மநீம தலைவர் டாக்டர் கமல்ஹாசன், விரைவில் கோவை மக்களை நேரில் சந்திக்க வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.