கோவையில் தூய்மைப் பணியாளர்களுக்கு போக்குவரத்து வசதி வேண்டி கோரிக்கை..!

கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகராட்சியில் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான போக்குவரத்து வசதி செய்து தர வேண்டி கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் தூய்மைப் பணியாளர்கள் பணியிடங்களுக்கு உரிய நேரத்துக்குள் செல்லத் தேவையான போக்குவரத்து வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அண்ணல் அம்பேத்கர் சுகாதாரத்துறை மற்றும் பொதுப் பணியாளர் சங்க பொதுச்செயலாளர் தமிழ்நாடு செல்வம், ‘‘கொரோனா முழு ஊரடங்கு காரணமாக பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இச்சூழலில் மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் தூய்மைப் பணிக்கான தொழிலாளர்கள் காலை 6.15 மணிக்கு கையெழுத்திட வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

போக்குவரத்து வசதி முடக்கி வைக்கப்பட்டுள்ள இந்தநேரத்தில், தூய்மைப் பணியாளர்களைப் பணிக்கு அழைத்து வருவதற்கான வாகனம், சம்பந்தப்பட்ட தொழிலாளர் குடியிருப்புகளுக்கு காலை 6.45 முதல் 7 மணிக்கே வருகிறது. அந்த வாகனம் மூலமாக வந்து சேர 7 மணிக்கு மேல் ஆகி விடுகிறது. எனவே, அதிகாரிகள் தெரிவித்துள்ள நேரத்துக்குள் தொழிலாளர்கள் பணியிடங்களுக்கு வந்து சேர உரிய போக்குவரத்து வசதியை மாநகராட்சி நிர்வாகம் ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...