கோவை: அண்மையில், தமிழகக் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதனடிப்படையில், பொள்ளாச்சியில் புதிதாகப் பதவியேற்ற டிஎஸ்பி தமிழ்மணி, பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க முழு முயற்சி எடுப்பேன் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவல்துறை வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் அதிகாரிகளை அரசு இடமாற்றம் செய்து வருகிறது. இந்தநிலையில், பொள்ளாச்சி டிஎஸ்பி சிவக்குமார் சிவகங்கை மாவட்டத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அரூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த டிஎஸ்பி தமிழ்மணி பொள்ளாச்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இன்று பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தில் உள்ள டிஎஸ்பி அலுவலகத்தில் பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட டிஎஸ்பி தமிழ்மணி பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ‘‘பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்களைத் தடுக்கத் தீவிர முயற்சி எடுக்கப்படும். சட்டவிரோத செயல்களை தடுத்து நிறுத்தவும், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் முழு முயற்சி எடுக்கப்படும். இதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.