கோவை: கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரயில்வே மேம்பாலப் பணிகளை மக்களுக்கும், நில உரிமையாளர்களுக்கும் பாதிப்பின்றி மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் ரயில்வே பாதையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரயில்வே மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டு, ரயில்வே இருப்புப் பாதைக்கு மேல்புறத்தில் மட்டும் பாலம் அமைத்துவிட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக அந்தப் பாதை, பொது மக்களுக்கு பயன்படாத பாதையாக இருந்து வருகிறது. இந்தநிலையில், கடந்த 16ஆம் தேதி மேம்பாலப் பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் பூமி பூஜையிட்டு, ரயில்வே பாதைக்கு வடக்கு பக்கத்தில் மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘ரயில்வே பாதைக்கு தெற்கு பக்கம் உள்ள இரண்டு நிறுவனங்கள் நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக தாக்கல் செய்த வழக்கு நிலுவையில் உள்ளதால், வடக்கு பக்கம் இருந்து பணியை மேற்கொள்ள உள்ளோம். அதற்குள் பாலத்தின் தெற்கு பக்கத்தில் வழக்குகள் முடிவடைந்து விடும்’’ என்றனர். ஏற்கெனவே, மேம்பாலப் பணி நிலுவையில் உள்ளதால், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. மேலும், வடக்கு பக்கம் ஏற்கெனவே குடிநீர் குழாய்களை மாற்றி சீரமைக்க வேண்டிய நிலை உள்ளது.
இதுகுறித்து பீளமேடு பகுதி மதிமுக செயலாளர் வெள்ளிங்கிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘‘இந்தப் பாலத்திற்கு கீழே சுரங்கப்பாதையும் அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து வழக்குகளையும் முடித்துக்கொண்டு நில உரிமையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையைக் கொடுத்துவிட்டு, குடிநீர் குழாய்களை மக்களுக்கு இடையூறு இல்லாமல் மாற்றியமைத்து, நில எடுப்பு நடவடிக்கைகளை முழுமையாக முடித்துவிட்டு, பொதுமக்களுக்கும், நில உரிமையாளர்களுக்கும் எந்த வித பாதிப்பின்றி, தண்ணீர்பந்தல் ரயில்வே மேம்பால பணிகளை செய்தால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே, தாங்கள் ஆய்வு செய்து, அதன்பிறகு பணிகளைத் தொடங்க, அறிவுறுத்த வேண்டும்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.