கோவை: கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, அதனைத் தடுக்கும் நடவடிக்கையாக வால்பாறையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பெருந்தொற்றைக் குறைக்க தமிழக அரசு அனைவருக்கும் தடுப்பூசி போட அறிவுறுத்தி வருகிறது. இதனடிப்படையில், வால்பாறையில் சுகாதாரத்துறை மருத்துவமனை மருத்துவர் பாபு லட்சுமணன் தலைமையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் வால்பாறை, முடிஷ் சேகல்முடி, ஐயற்பாடி, சோலையார் கருமலை, உருளிகள் எஸ்டேட் பகுதில் நடைபெறுகிறது.

இதில் கோவாக்சின் தடுப்பு ஊசி பயன்படுத்தப்படுகிறது. இன்று 1500 பேர்களுக்கு 18 வயது முதல் 45 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த ஊசி போடப்பட்டது.

வால்பாறை ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் தனித்தனியாகக் கொட்டும் மழையில் வரிசையில் நின்று ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.