கோவை: வால்பாறையில் கொட்டும் மழையிலும் கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாமில் பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு பின்னர் விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது.

இந்த தடுப்பூசி முகாமில் 45 வதுக்குமேற்பட்ட ஆண், பெண் இருபாலரும் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதில் 125 ஆண்களுக்கும், 125 பெண்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
இம்முகாமில் வால்பாறை, வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லட்சுமணன், அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மற்றும் செவிலியர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கொட்டும் மழையை பொருட்படுத்தாது ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.