கோவை: பாம்பன் ரயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கோவை: பாம்பன் ரயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக திருவனந்தபுரத்தில் இருந்து கோவை வழியாக செல்லும் சிறப்பு ரயில் ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து அசாம் மாநிலம் கவுகாத்திக்கு வரும் 19, 26 மற்றும் ஜூலை 3, 10ம் தேதிகளில் வாராந்திர சிறப்பு ரயில் (06185) இயக்கப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் இருந்து சனிக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்படும் ரயிலானது எர்ணாகுளம் டவுன், பாலக்காடு, கோவை, திருப்பூர், சென்னை சென்ட்ரல், விஜயவாடா, புவனேஸ்வர் உட்பட இடங்களில் நின்று செல்லும். 4வது நாளான செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கோவா சென்றடையும். இந்த ரயில் கோவைக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.27 மணிக்கு வருகிறது.
அதேபோல, வரும் 23, 30 மற்றும் ஜூலை 7, 14 ஆம் தேதி திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் (06186) இயக்கப்படுகிறது. கவுகாத்தியிலிருந்து புதன்கிழமை மாலை 6.45 க்கு புறப்படும் ரயில் மூன்றாம் நாளான வெள்ளிக்கிழமை இரவு 11.30-க்கு திருவனந்தபுரம் அடைகிறது. இந்த ரயில் கோவைக்கு வெள்ளிக்கிழமை மதியம் 12.52 வருகிறது. முழுவதும் முன்பதிவு செய்து பயணிக்கும் இந்த ரயிலுக்கு டிக்கெட் முன்பதிவு நடப்பதாக தெற்கு ரயில்வே வாரியம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பாம்பன் ரயில்வே பாலம் பராமரிப்பு பணிகள் காரணமாக ராமேஸ்வரம் கோவை வாராந்திர சிறப்பு ரயில் (06617) சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதாவது ராமேஸ்வரத்திலிருந்து நேற்று 19:27 புறப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை 6.30 மணிக்கு கோவை வர வேண்டிய ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளதாக சேலம் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.