கோவை: கோவை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

கோவையில் கொரோனா தீவிரமடைந்து இப்போது படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையே கருப்பு பூஞ்சை நோய் பரவத் துவங்கி உள்ளது. இந்த கருப்பு பூஞ்சை நோய் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட நபர்களையே தாக்கும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று தீவிரமாகத் தாக்கியவர்களை குறிவைத்து கருப்பு பூஞ்சை நோய் பாதித்து வருகிறது. அந்த வகையில் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 126 பேர் இந்த கருப்பு பூஞ்சை நோய் பாதிப்புக்கு ஆளானார்கள்.
இந்த நிலையில், நேற்று மேலும் 3 பேருக்கு கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன் மூலமாக இதுவரை மொத்த பாதிப்பு எண்ணிக்கை 129 ஆக உயர்ந்தது. அதில் 33 பேர் வரை குணமடைந்து வீட்டுக்கு திரும்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.