கோவைக்கு ரெயில் கன்டெய்னர்களில் 78 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை!

கோவை: கோவைக்கு ரெயில் கன்டெய்னர்களில் 78 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்தடைந்தது.


கோவை: கோவைக்கு ரெயில் கன்டெய்னர்களில் 78 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்தடைந்தது.

கோவை மாவட்டத்தில் கோவை அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்டவற்றில் 1,979 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன.

இதேபோல் கொடிசியா உள்ளிட்ட கொரோனா தற்காலிக சிகிச்சை மையங்களில் 465 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 3,035 ஆக்சிஜன் படுக்கைகள் இருக்கின்றன.

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தற்போது வரை சுமார் 3,500 பேர் ஆக்சிஜன் வசதியுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் வடமாநிலங்களில் இருந்து ரெயில் கன்டெய்னர்கள் மூலம் கோவைக்கு ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது.

ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து கோவையை அடுத்த இருகூருக்கு நேற்று 4 கன்டெய்னர் அடங்கிய ரெயிலில் 77.78 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்தது.

தமிழ்நாட்டிற்கு இதுவரை 5434.14 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வந்துள்ளது. இந்த ஆக்சிஜன், கன்டெய்னர் லாரி மூலம் கோவையில் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...