திருப்பூர்: திருப்பூரில் ஊரடங்கு காரணமாக எளிமையாக திருமணம் நடைபெற்றதால், திருமண செலவு தொகையை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக புதுமணதம்பதி கொடுத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூரை சேர்ந்த தொழிலதிபர் அருள்செல்வம். இவரது 2வது மகன் அருள் பிரனேஷ். இவருக்கும் திருப்பூர், விகாஸ் வித்யாலயா, வித்யாசாகர் குழுமத்தை சேர்ந்த கவுரிசங்கர் - கவிதா தம்பதியின் மகள் அனு என்பவருக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

கடந்த 14 ஆம் தேதி காங்கயம் - வட்டமலை அங்காளம்மன் கோவிலில் கொரோனா விழிப்புணர்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு எளிமையாக திருமணம் நடந்தது. திருமணத்தை எளிமையாக நடத்தியதால், திருமண செலவுக்கு திட்டமிட்டிருந்த பணத்தை நற்பணிகளுக்கு தர மணமக்களின் வீட்டார் முடிவு செய்தனர்.
இது குறித்து பேசிய மணமகனின் தந்தை, “திருமண செலவுக்கு ஒதுக்கிய நிதியில் தற்போதைக்கு ரூ.37.66 லட்சத்தை பல நற்பணிகளுக்காக கொடுத்துள்ளோம். ரூ.50 லட்சம் இலக்கு என்ற வகையில் மீத தொகையையும் கூடிய விரைவில் நற்பணியாக கொடுக்க உள்ளோம்,” என்று கூறினார்.
திருமணம் முடிந்த கையோடு, திருப்பூர் அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரோட்டரி கொரோனா கேர் சென்டருக்கு ரூ. 5 லட்சம், பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள கொரோனா மையத்திற்கு ரூ.11 லட்சம், புஞ்சை புளியம்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் கட்டமைக்கப்படும் முதியோர் இல்லத்திற்கு ரூ. 2 லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
மேலும் திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம் சார்பில் பல்லடம் அரசு மருத்துவமனையில் உள்ள சிகிச்சை மையத்திற்கு ஐ.சி.யு., யூனிட் அமைக்க, 7.66 லட்சம், மருத்துவ செலவினங்களை எதிர்கொள்ள முடியாமல் தத்தளிக்கும், 8 குடும்பங்களுக்கு, 7 லட்சம் எனவும் மணமகனின் தந்தை கொடுத்துள்ளார்.

இது தவிர மங்களம் ரோடு பாரபழையம் அரசு பள்ளிக்கு கட்டிடம் கட்ட 5 லட்சம் என, மொத்தமாக 37.66 லட்சம் ரூபாயை வழங்கியுள்ளனர். திருமணத்தில் மீதமான தொகையை பல்வேறு நலத்திட்ட பணிகளுக்கு வழங்கியுள்ள மணமக்களின் குடும்பத்தினரின் செயலை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.