கோவை: கோவையில் கஞ்சா விற்பனை செய்து தங்களது காதலை உல்லாசமாக அனுபவித்து நாட்களைக் கழித்து வந்த காதல் ஜோடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கோவையில் தன்னுடைய காதலை வளர்க்கவும் உல்லாசமாக ஊர் சுற்றவும் பணம் தேவைப்பட்டதால், காதல் ஜோடிகள் இணைந்து கஞ்சா விற்பனை செய்து வந்தநிலையில், கையும் களவுமாக மாட்டிக் கொண்டனர். கோவையில் கஞ்சா விற்ற காதலியான நர்ஸ், காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
பீளமேடு போலீஸார் சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நேரு நகர் அடுத்த வீரியம்பாளையம் சாலையில் உள்ள காலி மைதானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் வாலிபர் ஒருவர் இளம்பெண்ணுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவர்களை அழைத்து விசாரித்தபோது முன்னுக்குப்பின் முரணாகப் பேசினர். இதையடுத்து அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது கஞ்சா பொட்டலங்கள் விற்பனைக்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட இளம்பெண் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரின் மகள் தமன்னா என்கிற வினோதினி(21) என்பதும் அவருடைய காதலன் மல்லேஷ் என்பவரின் மகன் சூர்யா என்கிற சூரிய பிரசாத்(21) என்பதும் தெரியவந்தது. மேலும், அவர்களிடம் நடத்திய விசாரணையில் சூர்யா என்கிற சூரிய பிரசாத் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்துக் கொண்டே பகுதி நேரமாக கஞ்சா விற்று வருவது தெரியவந்தது.
மேலும், அவரது காதலி தமன்னா என்கிற வினோதினி கோவையில் உள்ள பிரபல மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்து கொண்டு காதலனுக்கு கஞ்சா விற்பதற்கு உதவி செய்து வந்துள்ளார். இருவரும் ஜோடியாக சென்றால் போலீஸாருக்கு சந்தேகம் வராது என்பதாலும் தற்போது ஊரடங்கு இருப்பதால் நர்ஸ் எனக்கூறி எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம் என திட்டமிட்டு இவர்கள் கஞ்சாவைக் கடத்தி வந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதற்காக இருவரும் கோவை பீளமேடு அடுத்த நேரு நகர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. விசாரணையைத் தொடர்ந்து இருவரையும் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 2 கிலோ 250 கிராம் கஞ்சாவைப் பறிமுதல் செய்து, சிறையில் அடைத்தனர்.