கோவை: கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) குறு சிறு தொழிற்பிரிவை சேர்ந்த 19 அமைப்புகளை உள்ளடக்கியது. இந்தக் கூட்டமைப்பு கொரோனா தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் குறு சிறு தொழில்களை அழிவிலிருந்து பாதுகாக்க மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்துள்ளது.

கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள கோரிக்கை மனுவில், ‘‘கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பு (FOCIA) குறு சிறு தொழிற்பிரிவை சேர்ந்த 19 அமைப்புகளை உள்ளடக்கியது. இந்த கூட்டமைப்பில் சுமார் 15,000 தொழில் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிறுவனங்களில் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். கோவையின் குறு சிறு தொழில்களின் குரலாக ‘FOCIA' ஒலித்து வருகிறது.
கோவை மாவட்டத்தின் ஆட்சியாளராக பொறுப்பேற்றுள்ள தங்களுக்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். கோவை பொருளாதார கட்டமைப்பின் முதுகெலும்பாக விளங்கும் குறு சிறு தொழில்களின் பாதுகாப்பிற்கும், வளர்ச்சிக்கும் தாங்கள் உறுதுணையாக இருப்பீர்கள் என நம்புகிறோம்.
தமிழகத்தில் தற்போது 40 நாட்களாக அமலில் உள்ள ஊரடங்கு நடவடிக்கைகளால், குறு சிறு தொழில்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கோவையில் 95 சதவிகித தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
அத்தியாவசியப் பொருட்களைத் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் இவற்றுக்கு பாகங்களை செய்து தரும் குறு சிறு தொழில்களும் ஊரடங்கு காலத்திலும் செயல்பட அனுமதிக்கப்பட்டு்ள்ளன. ஆனால், குறு சிறு தொழில்களுக்கு தேவையான கருவிகள், மற்றும் இடுபொருட்களை விற்கும் கடைகள் மூடப்பட்டுள்ளதால், அனுமதியுள்ள தொழிற்சாலைகளும் செயல்பட முடியவில்லை.
சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பு, பொருளாதார சுணக்கம். மூலப்பொருட்களின் அளவு கடந்த விலை உயர்வு ஆகியவற்றால், குறு சிறு தொழில்கள் பின்னடைந்து கிடக்கின்றன. இதற்கு மேலும், தற்போது 40 நாட்களாக மூடப்பட்டுள்ளதால் கடுமையான நெருக்கடியில் சிக்கி நலிவடைந்துள்ளன. இந்த்நிலையில், மின்கட்டணத்தை 15.06.2021-க்குள் கட்டவேண்டும் என்ற மின்வாரியத்தின் உத்தரவு, மேலும் துயரங்களை சேர்க்கின்றது.
கோவையில் கொரோனா தாக்கத்தில் சிக்கித் தவிக்கும் குறு சிறு தொழில்களை அழிவிலிருந்து பாதுகாக்க கீழ்கண்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம்.
1. மின்கட்டணம்:
கோவை மாவட்டத்தில் ஊரடங்கு அதிக நாட்களுக்கு நீடிப்பதால், குறு சிறு தொழில்கள் அனைத்திற்கும் குறைந்தது எதிர்வரும் இரண்டு மாத கால மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும். ஏற்கெனவே போடப்பட்டுள்ள மின்கட்டணத்தை செலுத்துவதற்கு தொழில்கள் மீண்டும் இயங்கும் தேதியிலிருந்து ஒரு மாத கால அவகாசம், (அபராதம் ஏதுமின்றி) கொடுக்க வேண்டும்.
2. தொழிலாளர்களுக்கு தடுப்பூசி:
ஊரடங்கு தொடர்பான தமிழக அரசின் அறிவிக்கைகள் எல்லாவற்றிலும், தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தடுப்பூசி போட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளில்தான் பணியாளர்கள் அருகருகே வேலை செய்ய வேண்டியுள்ளது. எனவே, தடுப்பூசி போடுவதில் குறு சிறு தொழில்களின் பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். தொழில் அமைப்புகள், தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்தால், அங்கு தடுப்பூசி மருந்து உரிய ஒதுக்கீடு செய்து வழங்க வேண்டும்.
மேற்கண்ட கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலித்து, நிறைவேற்ற தமிழக அரசுக்கு பரிந்துரை செய்யுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.