பொதுப் போக்குவரத்து இயங்க அறிவிப்பு வந்தால் கோவை கோட்டத்தில் 1070 பேருந்துகள் இயக்க திட்டம்..!!

கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் இருந்து 1070 அரசு பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் அந்த பேருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.



கோவை: ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளித்தால், கோவை கோட்டத்தில் இருந்து 1070 அரசு பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது எனவும் அந்த பேருந்துகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது என போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மே மாதம் முதல், அரசு மற்றும் தனியார் பேருந்துகளின் இயக்கம் முழுவதுமாக நிறுத்தப்பட்டது. பொதுப் போக்குவரத்து சேவைகள் மறு அறிவிப்பு வரும் வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே, ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிக்கப்பட்டு பொதுப்போக்குவரத்து துவங்க அனுமதி அளிக்கப்பட்டால் கோவை கோட்டத்தில் இருந்து 1070 பேருந்துகளை இயக்க கோவை அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது.

இது குறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘ கோவை கோட்டத்தில் உள்ள பணிமனைகளில் உள்ள அரசு பேருந்துகளின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. பெரும்பாலான பேருந்துகளின் பாராமரிப்பு பணிகள் முடிவடைந்து இயங்க தயார் நிலையில் உள்ளது. அரசு பேருந்துகள் இயங்க அனுமதி அளித்தால் கோவை கோட்டத்தில் 1070 பேருந்துகளை இயக்க திட்டமிட்டுள்ளோம். பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்,’’ என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...