கோவை: கோவை மாவட்டம், வால்பாறையில் கொட்டித் தீர்த்த மழையால் அதிகபட்சமாக மேல் நீரார் அணையில் 107 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறையில், கடந்த ஒரு வார காலமாக கன மழை பெய்து வருகிறது. சோலையார் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் மற்றும் கீழ் நீரார் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், அதிகபட்சமாக மேல் நீரார் அணையில் 107 மில்லி மீட்டரும், கீழ் நீரார் அணையில் 100 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. இதன் காரணமாக வெல்லமலை சுரங்க கால்வாய் வழியாக 2 ஆயிரம் கன அடிக்கு மேல் நீர் வந்து கொண்டுள்ளது.
இதன்காரணமாக, சோலையார் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 8 அடி உயர்ந்து அணை, இன்று கிடுகிடுவென உயர்ந்து 65.70 அடியாக உயர்ந்துள்ளது. இன்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீரார் அணையில் 107 மி.மீட்டர் மழையும், கீழ் நீரார் அணையில் 100 மி.மீ.மழையும், சோலையார் அணை பகுதியில் 52 மி.மீ மழையும், வால்பாறை நகரில் 39 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
மேலும், சோலையார் 2823 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 426.39 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 165 அடி உயரமுள்ள அணையில்நீர்மட்டம் 65.70 அடியாக உள்ளது. மேலும், தொடர்ந்து வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால் சோலையார் அணைவிரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பொதுப்பணித்துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.