கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
கோவை: கோவை மாவட்டத்தில் கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது.
கோவை மாவட்டத்தில் இரண்டாவது அலை உச்சத்தில் இருந்தது. இதனால் தினமும் 4,000 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டது. நாள்தோறும் அதிகரித்த நோயாளிகளினால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் நிரம்பின. இதையடுத்து அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வீடுகளில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி, கடந்த மாதம் 27 ஆயிரம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு ஆன்லைன் மூலம் மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. தற்போது தினசரி பாதிப்பு குறைந்து வருவதால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. தற்போது 10 ஆயிரத்துக்கும் கீழ் இந்த எண்ணிக்கை குறைந்துள்ளது.
கோவை ஊரகப் பகுதியில் 1,169 தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது. கடந்த மாதம் மதுக்கரை வட்டாரத்தில் 70க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகள் இருந்தன. இது தற்போது 22 ஆக குறைந்துள்ளது.
இதேபோல, சூலூர் 19, துடியலூர் 36, காரமடையில் 31, பொள்ளாச்சியில் 11, ஆனைமலையில் 3, தொண்டாமுத்தூரில் 4, அன்னூரில் 8 இடங்களில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.