‘எம்எஸ்எம்இ' தொழில் நிறுவனங்களுக்கு ‘டிமாண்ட் சார்ஜ்' ரத்து... மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டும் என தமிழக அரசுக்கு ‘OSMA', ‘SISPA', ‘TACT' தொழில் அமைப்புகள் கோரிக்கை..!

கோவை: ஒரு மாதத்துக்கு மேல் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ள காரணத்தால் மிகுந்த நிதி நெருக்கடியில் தவிக்கும் ‘எம்எஸ்எம்இ' தொழில் நிறுவனங்களை காப்பாற்ற ‘டிமாண்ட் சார்ஜ்' ரத்து செய்யவும் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை செலுத்த இரண்டு மாதங்கள் காலஅவகாசம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.



கோவை: ஒரு மாதத்துக்கு மேல் தொழில் நிறுவனங்கள் செயல்படாமல் உள்ள காரணத்தால் மிகுந்த நிதி நெருக்கடியில் தவிக்கும் ‘எம்எஸ்எம்இ' தொழில் நிறுவனங்களை காப்பாற்ற ‘டிமாண்ட் சார்ஜ்' ரத்து செய்யவும் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை செலுத்த இரண்டு மாதங்கள் காலஅவகாசம் வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொழில் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்ஸ்(OSMA) சங்கத்தின் தலைவர் ஜெயபால் கூறியதாவது, ‘‘தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட ஊரடங்கு தளர்வுகள் வழங்கப்படாத 11 மாவட்டங்களில் உள்ள ‘எம்எஸ்எம்இ'(MSME) தொழில் நிறுவனங்கள் மிகுந்த நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளன. ஸ்பின்னிங் மில்களில் இருந்து பெறப்படும் கழிவுப் பஞ்சை கொண்டு நூல் உற்பத்தி செய்யும் பணி ஓபன் எண்ட் ஸ்பின்னிங் மில்களில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலும் வட மாநில தொழிலாளர்கள் தான் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தற்போது நோய்த்தொற்று பரவல் இரண்டாவது அலை அதிக தாக்கத்தை ஏற்படுத்திய காரணத்தால் மே 10 முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்துவதற்கு முன்பே மகாராஷ்ட்ரா, டெல்லி, குஜராத் உள்ளிட்ட பல வடமாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விட்டன. இதனால் மில் உரிமையாளர்களுக்கு வரவேண்டிய பேமென்ட் மிக அதிக தொகை நிலுவையில் வைக்கப்பட்டுள்ளன.

கடந்த ஒரு மாதத்துக்கு மேல் மில்கள் செயல்படாத நிலையில், உரிமையாளரிடம் மின் கட்டணத்தை செலுத்த வற்புறுத்துவது நியாயமான செயல் அல்ல. நோய்த்தொற்று முதல் அலை பரவலின் போது தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தங்க வைக்கவும், உணவு வழங்கவும் மீண்டும் அவர்களை சொந்த ஊர்களுக்கு செல்ல ரயில் வசதி ஏற்படுத்தித் தருதல் உள்ளிட்ட உதவிகள் அரசு சார்பில், மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது.

நோய்த்தொற்று இரண்டாவது அலை பரவியுள்ள சூழலில் கடந்தமுறை அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் இந்த முறை வழங்கப்படவில்லை. இன்றுவரை மில் தொழிலாளர்களைப் பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கி அவர்களுக்கு தடுப்பூசி செலுத்த சிறப்பு முகாம் ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் உரிமையாளர்கள் சார்பில்தான் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் அனைவரும் கூடுதல் நிதிச் சுமையை சந்தித்து வருகின்றனர். இவை எல்லாவற்றுக்கும் மேல் தளர்வுகள் அறிவிக்கப்படாத 11 மாவட்டங்களில் அனைத்து எம்எஸ்எம்இ நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. இருப்பினும் தொழிலாளர்களைப் பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்கு தற்போது பாதி சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதேநிலை நீடித்தால் எதிர்வரும் மாதங்களில் லட்சக்கணக்கான தொழிலாளர் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படும். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு மின் கட்டணம் தொடர்பான தொழில் துறையினரின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின்(SISPA) செயலாளர் வெங்கடேசன் கூறியதாவது, ‘‘எங்கள் சங்கத்தில் 40 சதவிகிதத்துக்கும் அதிகமான உறுப்பினர்கள் உயர் அழுத்த(HT) மின் நுகர்வோராக உள்ளனர். ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ஒரு மாதத்தை கடந்துள்ள இந்த சூழ்நிலையில் உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு ‘டிமாண்ட் சார்ஜ்' வசூலிக்கப்படுவது மிகவும் வருத்தத்துக்குரியது. மில்கள் செயல்படாத நிலையிலும் ‘டிமாண்ட் சார்ஜ்' என்பது ஒவ்வொரு மில் நிர்வாகமும் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ஏற்கனவே, கடும் நிதி நெருக்கடியால் தவித்து வரும் மில் உரிமையாளர்கள் தொழிலாளர்களைப் பாதுகாத்து அவர்களைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகின்றனர். இத்தகைய சூழலில் லட்சக்கணக்கில் மின்கட்டணம் செலுத்தக் கூறினால் அவர்கள் நிலை என்னவாகும். ‘எம்எஸ்எம்இ' தொழில் நிறுவனங்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக உயர் அழுத்த மின் நுகர்வோருக்கு ‘டிமாண்ட் சார்ஜ்' ரத்து செய்யவும் பயன்பாட்டுக்கான மின் கட்டணத்தை செலுத்துவதற்கு குறைந்தபட்சம் ஒரு மாதமாவது கால அவகாசம் வழங்க வேண்டும்'' என்று கூறினார்.

தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் ஊரக தொழில் முனைவோர்கள் சங்கம்(TACT) மாவட்டத் தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, ‘‘நோய்த்தொற்று முதல் அலை பரவல் பாதிப்பிலிருந்து எம்எஸ்எம்இ தொழில்துறையினர் மீண்டு வராத சூழ்நிலையில் இரண்டாவது அலை பரவல் மிகுந்த நெருக்கடிக்கு தொழில் துறையினரைத் தள்ளியுள்ளது. அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் எம்எஸ்எம்இ தொழில் நிறுவனங்களை நடத்தி வரும் உரிமையாளர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிதி நெருக்கடியைக் கண்டு மிகுந்த மன உளைச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையில் மின் கட்டணம் செலுத்த சலுகை வழங்கப்படாது என்று அரசு தெரிவித்துள்ளது மிகவும் வருந்தத்தக்கது. மூடிய தொழிற்சாலைகளைத் திறந்தவுடன் ஒரு மாதத்தில் எந்த உரிமையாளர்களுக்கும் லாபமும் கிடைத்துவிடாது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மாதம் மற்றும் தளர்வு வழங்கப்பட்ட பின் செயல்படக்கூடிய முதல் மாதம் என இரண்டு மாதங்களுக்கு மின் கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அல்லது கால அவகாசம் அளிக்க வேண்டியது மிக அவசியம். தொழில் முனைவோரின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றும் என நம்புகிறோம்'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...