வால்பாறையில் கனமழை... குளங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு..!

கோவை: வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் குளங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.


கோவை: வால்பாறை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. கனமழையால் குளங்கள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மழையால் எஸ்டேட் பகுதியில் உள்ள தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர். வால்பாறை, சின்னக்கல்லார், சின்கோனா, ஈட்டியார், சோலையார் அணை, உருளிக்கள், கருமலை, அக்காமலை, வெள்ளைமலை, வேவர்லி கவர்கள் ஆகிய எஸ்டேட் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகக் காற்று வீசுவதால் தேயிலைப் பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்கள் அதிக சிரமப்பட்டு வருகின்றனர்.



பொதுவாக வால்பாறை பகுதியில் ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வரும். அதேபோல், இந்த ஆண்டும் ஜூன் 1-ஆம் தேதி முதல் பருவ மழை பெய்யத் தொடங்கியது.



காலையிலிருந்து பெய்த கனமழையால் கூழாங்கல் ஆறு, நடுமலை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சோலையார் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சோலையார் அணையின் நீர்மட்டம் 165 அடி உயரத்துக்கு 57.50அடி உயரம் உள்ளது. அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 960.42 கன அடியாகவும் அணையில் நீர் இருப்பு 5677 டிஎம்சி தண்ணீர் அளவுக்கு தற்போது 1298.64 டிஎம்சி தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து மின்சாரம் தயாரித்து பரமிகுளம் அணைக்கு 429.51கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. வால்பாறை 25 மில்லி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் பகுதியில் 59 மில்லி மீட்டர் மழையும், நீரார் அணை பகுதியில் 36 மில்லி மீட்டர் மழையும் சோலையார் அணை பகுதியில் 34 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவானது.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...