பொள்ளாச்சியில் நியாய விலைக் கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணத் தொகையுடன் மளிகைப் பொருட்கள் வழங்கல்..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 389 நியாய விலைக் கடைகளில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு, நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.


பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 389 நியாய விலைக் கடைகளில், 2 லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு, நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன் அடிப்படையில் கடந்த மாதம் முதல் தவணையாக ரூபாய் 2000 வழங்கப்பட்டது. இதனையடுத்து இன்று முதல் இரண்டாம் தவணை தொகையான இரண்டாயிரம் ரூபாயுடன் சேர்த்து பருப்பு, சர்க்கரை, கோதுமை மாவு உள்ளிட்ட 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதில், பொள்ளாச்சி பகுதியில் 389 நியாய விலை கடைகளில் இரண்டு லட்சத்து 32 ஆயிரத்து 589 குடும்ப அட்டைதாரர்களுக்கு தற்போது நிவாரணத் தொகையுடன் சேர்த்து மளிகைப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.



அனைத்து கடைகளிலும் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில், ஏற்கெனவே டோக்கன் வழங்கப்பட்டதன் அடிப்படையில் பொதுமக்கள் சமூக இடைவெளியுடன் நின்று பொருட்களைப் பெற்றுச் செல்கின்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...