கோவை: கோவையை கொரோனா இல்லாத மாவட்டமாக மாற்ற மக்களின் ஒத்துழைப்பு தேவை என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் இன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 வகையான பொருட்கள் வழங்கும் விழா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, “கோவை மாவட்டம் கொரோனா நோய் இல்லாத மாவட்டமாக மாற மக்களின் ஒத்துழைப்பு தேவை. கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
ஜூன் மாதம் இறுதிவரை கோவை மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் நிவாரண தொகை மற்றும் மளிகை பொருட்களை பெற்றுக்கொள்ளலாம். மக்கள் அவசர படத் தேவையில்லை,” என்றார்.