அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் சக்கரபாணி உறுதி!

பொள்ளாச்சி: அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.


பொள்ளாச்சி: அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் சக்கரபாணி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.



பொள்ளாச்சியில், குடும்ப அட்டைதார்களுக்கு நியாய விலை கடைகளில் இரண்டாவது தவணை தொகை ரூ.2000 மற்றும் 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



விழாவில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நிவாரண உதவித்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் அளித்த அமைச்சர் சக்கரபாணி, "தமிழக மக்களை கொரோனாவின், பிடியில் இருந்து பாதுகாக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தி அதிக எண்ணிக்கையில் தடுப்பூசியை பெற முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்து வருகிறார்.



சென்னைக்கு அடுத்தபடியாக கோவை மாவட்டத்தில் அதிக அளவு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கட்டுமான பொருட்கள் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறை அமைச்சர் சிமெண்ட் உற்பத்தியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

இதேபோல அனைத்து பொருட்களின் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று நம்பிக்கை தெரிவித்தார். கோவை மாவட்டத்தில் 10,31,142 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படும் பணி தொடங்கியுள்ளது.

தினந்தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதன் அடிப்படையில் பொருட்கள் வழங்கப்படும், பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அடுத்த மாதம் இறுதி வரை எப்போது வேண்டுமானாலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்," என்று, தெரிவித்தார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...