கோவை: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படாத காரணத்தால் பழநிக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து வருவதால் மாவட்ட எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுவதால் இந்த மாவட்டங்களை காட்டிலும் பிற மாவட்டங்களுக்கு ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, கோவை உள்ளிட்ட 11 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி திறக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்திற்கு அருகில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் பழநி தாலுக்காவில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் டாஸ்மாக் கடை திறக்கப்படாத காரணத்தால் கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை வழியாக பழநிக்கு மதுப்பிரியர்கள் படையெடுத்து வருகின்றனர். சிலர் மதுபாட்டில்களையும் வாங்கி வந்து கோவை மாவட்டத்தில் அதிக விலைக்கும் விற்பதாக புகார்கள் வருகின்றன.
இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் சுகாதாரத்துறை, காவல்துறையினரிடன் இணைந்து மாவட்ட எல்லை பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில், "கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து எல்லைப்பகுதிகளுமே ஊரடங்கு முதல் கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது பழநியில் இருந்து மது வாங்கி வருவோரை கண்காணிக்க பொள்ளாச்சி எல்லை பகுதியில் மட்டும் திருப்பூர் வழியாக கோவை மாவட்டம் வரும் பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றன. மேலும் தேவைப்படும் நபர்களுக்கு கொரோனா பரிசோதனையும் செய்யப்படுகிறது," என்றார்.