கோவை: கிணத்துக்கடவில் குறிச்சி-குனியமுத்தூர் கூட்டுக்குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குடிநீர் சாலையில் ஆறாக ஓடி வீணாகியது.

கோவை மாவட்டம் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிக்கு பொள்ளாச்சி அம்பராம்பாளையம் ஆற்றில் இருந்து குழாய் மூலம் கிணத்துக்கடவு வழியாக நிலத்தடியில் குழாய் மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
இந்தநிலையில், கிணத்துக்கடவு வழியாகக் கொண்டு செல்லப்படும் குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் திட்ட குழாயில் இன்று கிணத்துக்கடவு அரசு பெண்கள் மேல்நிலை பள்ளி முன்பு உடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய சுமார் ஒரு லட்சம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடி வீணாகியது.

இதையடுத்து குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் குறிச்சி குனியமுத்தூர் குடிநீர் குழாய் வழியாக தண்ணீரை நிறுத்தி கிணத்துக்கடவில் உடைந்த தண்ணீர் குழாயை சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது.
உடைந்த குழாயை சரிசெய்யும் பணி முடிந்தவுடன் மீண்டும் குறிச்சி குனியமுத்தூர் கூட்டு குடிநீர் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் என்று குடிநீர் வடிகால் வாரிய வட்டாரத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.