கோவை: கிணத்துக்கடவில் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
கோவை: கிணத்துக்கடவில் கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கும் பணியை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் உள்ள 70 நியாய விலை கடை மூலம் 32 ஆயிரத்து 781 பேருக்கு தமிழக அரசின் இரண்டாம் கட்ட நிவாரண நிதி ரூ.2000 மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.
கிணத்துக்கடவு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு இரண்டாம் கட்ட கொரோனா நிவாரண நிதியான ₹2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்களை வழங்கி, நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அமைச்சர் சக்கரபாணி, ”கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு வழங்கப்பட்டு வரும் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 வகையான மளிகை பொருட்கள் வழங்கும் பணி இம்மாத இறுதிவரை தொடரும்.
எனவே மக்கள் கூட்டமாக செல்லாமல் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி வாங்கி நிவாரண உதவி மற்றும் நிவாரணப் பொருட்களை வாங்கிச் செல்லலாம்,” என்றார்.
விழாவில் கோவை மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரை முருகன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் குமரேசன், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, கிணத்துக்கடவு வட்ட வழங்கல் அலுவலர் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.