கோவை: கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை: கோழிகமுத்தி யானைகள் முகாமில் உள்ள யானைகளுக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று சோதனை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வனத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுரைப்படி, ஆனைமலை புலிகள் காப்பகம் கோழிகமுத்தி யானை முகாமில் உள்ள 28 யானைகளுக்கு கடந்த 8ம் தேதி கொரோனா தொற்று பரிசோதனைக்கான சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
சேகரிக்கப்பட்ட யானைகளின் சளி மாதிரிகள் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் உள்ள இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்துக்கு (Indian Veterinary Research Institute) அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த பரிசோதனை முடிவுகள் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிறுவனத்திடமிருந்து கோவை, வனக் கால்நடை மருத்துவ அலுவலரால் இன்று பெறப்பட்டது.
சோதனையின் முடிவில், கோழிகமுத்தி யானை முகாமில் உள்ள 28 வளர்ப்பு யானைகளுக்கும் கொரோனா நோய் தொற்று ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.