ஏற்கனவே இருக்கும் பெண் அர்ச்சகராகும் திட்டத்தை அறநிலையத்துறை மீண்டும் அறிவிப்பது ஏன்? வானதி சீனிவாசன் கேள்வி

கோவை: பெண்கள் அர்ச்சகராவதற்கான பயிற்சி, ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான்; அது பற்றி, தற்போது புதிய அறிவிப்பாக அறநிலையத்துறை வெளியிடுவது ஏன்,” என, பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.


கோவை: பெண்கள் அர்ச்சகராவதற்கான பயிற்சி, ஏற்கனவே நடைமுறையில் இருப்பது தான்; அது பற்றி, தற்போது புதிய அறிவிப்பாக அறநிலையத்துறை வெளியிடுவது ஏன்,” என, பா.ஜ.க எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக பா.ஜ., தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

ஆனால், தற்போது சைவ மற்றும் வைணவ கோவில்களில், அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக பணிபுரிந்து கொண்டு தான் இருக்கின்றனர். அனைத்து ஜாதியினருக்கும், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படுகிறது.

அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில், தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என்கிறார். தமிழகம் முழுக்க உள்ள முக்கிய கோவில்களில், இன்றளவும் தமிழில் தான் அர்ச்சனை நடக்கிறது.

இதேபோல், பெண்களுக்கு அர்ச்சகர் பயிற்சி அளிக்கப்படும் என்றும் அமைச்சர் சொல்கிறார். மேல்மருவத்துார் ஆதிபராசக்தி அம்மன் உள்ளிட்ட பல கோவில்களில் பெண்கள் சேவை புரிந்து வருகின்றனர். பேரூர், சிரவை ஆதீனங்களில் பெண்களுக்கு அனைத்து ஆன்மிக பயிற்சிகளும் அளிக்கப்படுகின்றன.

ஹிந்துக்கள் மரபில், பெண்களுக்கான ஆன்மிக தளம் ஏற்கனவே உள்ளது. இதற்கு முன்னுதாரணமாக, காரைக்கால் அம்மையார், அவ்வையார் திகழ்ந்தனர். எந்தெந்த திட்டங்கள் நடைமுறையில் இருக்கின்றன என தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல் அமைச்சர் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...