கோவை: கோவையில் ஆலந்துறை பகுதியில் வீட்டில் வைத்து காய்ச்சி விற்பனை செய்யப்பட்ட 10 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவை ஆலாந்துறை அருகே ஒரு வீட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது, வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்காக வைத்திருந்த 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 10 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு ஸ்கார்பியோ கார், காஸ் ஸ்டவ், 2 சிலிண்டர், 210 கிலோ நாட்டு சர்க்கரை, ஒரு கிலோ கடுக்காய், ஒரு கிலோ ஜாதிக்காய், ஒரு கிலோ அதிமதுரம், 90 காலி வாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும், போளுவாம்பட்டி சேர்ந்த சம்பத்குமார் (38) என்பவர், வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. சம்பத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.