கோவை: சம்பள உயர்வு கோரி கோவை அரசு மருத்துவ முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை: சம்பள உயர்வு கோரி கோவை அரசு மருத்துவ முதுநிலை மருத்துவ மாணவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், “தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் ரூ.70,000 வரை மாதம் சம்பளம் வழங்கப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனை கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு அதில் பாதி கூட கிடைப்பதில்லை.
எம்பிபிஎஸ் முடித்து விட்டு பயிற்சியில் ஈடுபடும் மாணவர்களுக்கு ரூ.20 ஆயிரம் தான் சம்பளம் வழங்கப்படுகிறது. இதனை ரூ.30 ஆயிரமாக உயர்த்தி தர வேண்டும்.
மாத உதவித் தொகையையும் அதிகரிக்க வேண்டும். இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவாக சம்பளம் தரப்பகிறது. எனவே ஆண்டுதோறும் 10% அதிகரித்து தர வேண்டும்,” என்று தெரிவித்தனர்.