தமிழகத்தில் காற்றாலைகள் வாயிலாக 30 சதவீதம் மின்சாரம் உற்பத்தி!

கோவை: தமிழ்நாட்டின் பருவ நிலையில் காற்று வீசத்தொடங்கியதை அடுத்து இப்போது மொத்த மின் உற்பத்தியில் காற்றாலைகள் வாயிலாக 30 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.



கோவை: தமிழ்நாட்டின் பருவ நிலையில் காற்று வீசத்தொடங்கியதை அடுத்து இப்போது மொத்த மின் உற்பத்தியில் காற்றாலைகள் வாயிலாக 30 சதவீதம் மின்சாரம் கிடைக்கிறது.

நாடு முழுவதும் அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மரபுசாரா ஆற்றல் உற்பத்தி துறை முக்கிய பங்கு வகிக்கின்றது. இந்தியா முழுவதும் 38 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் அளவுக்கு காற்றாலை கட்டமைப்புகள் உள்ளன.

இதில் தமிழகத்தில் 9 ஆயிரத்து 500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கான காற்றாலை கட்டமைப்புகள் உள்ளன. ஆண்டுதோறும் மே இறுதியில் துவங்கி செப்டம்பர் வரை காற்றாலை மின் உற்பத்தி சீசன் ஆகும். ஆனால் கடந்த சில ஆண்டுகளை போலவே முன்கூட்டியே அதாவது ஏப்ரல் முதல் வாரத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் தொடங்கியது. காற்றின் வேகம் சீராக இல்லாத காரணத்தால் மின் உற்பத்தியில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. தற்போது ஜூன் முதல் வாரத்தில் இருந்து காற்று வேகம் அதிகரிக்க தொடங்கிய காரணத்தால் காற்றாலை வாயிலாக உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக உயர்ந்துள்ளது.

இது குறித்து இந்திய காற்றாலைகள் மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(Indian Wind Power Association, (IWPA) தலைவர், கஸ்தூரிரங்கையன் கூறியதாவது," கடந்த ஆண்டு காற்றாலை சீசனில் மொத்தம் 10 ஆயிரத்து 816 மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த ஆண்டும் 10,000 மில்லியன் யூனிட்டுக்கு அதிகமாக மின் உற்பத்தி செய்யப்படும் என கணிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக காற்றின் வேகம் அதிகரிக்க துவங்கியுள்ளதால் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது.

இன்றைய சூழலில் தமிழகத்தில் தினமும் சராசரியாக 318 மில்லியன் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 30% அதாவது 92 மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் கிடைக்கிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி தொடர்ந்து அதிகரித்து காணப்படும். ஜூலை மாதத்தில் அதிக மின் உற்பத்தி செய்யப்படும். ஆடி மாதத்தில் காற்று மிக வேகமாக வீசும் என்பதால் பீக்(Peak) சீசன் என அந்த மாதம் அழைக்கப்படுகிறது. அதிக காற்று வீசும் காலகட்டங்களில் தமிழகத்தின் மொத்த மின் தேவையில் காற்றாலைகளின் மின் உற்பத்தி பங்களிப்பு மிக கணிசமாக அதிகரிக்கும்," என்று கூறினார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...