வால்பாறை: வால்பாறை பகுதியில் தகுந்த முன்னேற்பாடுகள் இன்றி இறைச்சி கடைகள் செயல்பட தடை விதிக்க வேண்டும் என்று வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் 50க்கும் மேற்பட்ட தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆரோக்கியராஜ் சேவியர் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டிருப்பதாவது;
தேயிலைத் தோட்டப் பகுதியில் வசிக்கும் மக்களுக்காக தேயிலை தோட்டப் பகுதிகளில் ஆடு, மாடு, கோழி, மீன் போன்ற மாமிச கடைகள் இயங்கி வருகின்றன.
இந்தக் கடையில் இருந்து உரிய பாதுகாப்பின்றி திறந்தவெளியில் இறைச்சிக் கழிவுகள் வீசப்படுகின்றன. இறைச்சிக் கழிவுகளால் நோய்த் தொற்று பரவ வாய்ப்புள்ளது.
இறைச்சி கழிவுகளை உண்பதற்காக வனப்பகுதியில் இருந்து சிறுத்தைகள் ஊருக்குள் வருகிறது இதனால் எதிர்பாராத விதமாக சிறுத்தையால் மனித உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி தனியார் தேயிலை தோட்ட நிர்வாகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உரிய அனுமதி இன்றியும் பாதுகாப்பு முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஏதுமின்றியும் செயல்பட்டு வரும் மாமிச கடைகளுக்கு தடை விதிக்க வேண்டும்.
மனித வன உயிரின மோதல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு வனத்துறைக்கு தக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தனியார் தேயிலை தோட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் நகராட்சி நிர்வாகத்தின் அனுமதி பெற்று நடத்தப்படும் மாமிசக் கடை ஒப்பந்ததாரர்களுக்கு தக்க அறிவுரை வழங்கி விழிப்புணர்வு எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.”
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது