கோவை: கொரோனா தொற்றால் இறந்தோரின் உடலை தகனம் செய்ய அதிக கட்டணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றின் இரண்டாம் அலையின் தாக்கம் கடந்த மார்ச் மாதம் தொடங்கியது. முதல் அலையை விட அதிக தீவிரமாக இருந்தது. குறிப்பாக சென்னையை விட கோவையில் கொரோனா தொற்று அதி வேகமாக அதிகரித்தது. அரசின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கோவையில் கொரோனா பரவல் குறைய தொடங்கியுள்ளது. இரண்டாவது அலையில் கொரோனா தொற்றின் வீரியம் அதிகமாக இருந்ததால், இறப்பு விகிதமும் அதிகரித்தது. இந்த நிலையில் இறந்தவர்களின் உடலை தகனம் செய்ய கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து பீளமேடு மதிமுக பகுதி செயலாளர் வெள்ளியங்கிரி கூறுகையில், "பீளமேடு பகுதியில் உள்ள மயானங்களில் தகனம் செய்ய வரும் மக்களிடத்தில் ரூ.5 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சிலர் வசூலிக்கின்றனர். ஆகவே ஒவ்வொரு மயானத்திலும் கட்டணம் வசூல் செய்ய ஒரு நபரை நியமனம் செய்ய வேண்டும். மாநகராட்சி வசூலிக்கும் கட்டணத்துக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். இக்கட்டான காலகட்டத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “கொரோனாவால் இறந்தவர்களை தகனம் செய்ய 12 மின் மயானங்கள் உள்ளன. சரவணம்பட்டியில் 2 மயானம், சிங்காநல்லூர், நஞ் சுண்டாபுரம், கவுண்டம்பாளையம், வீரகேரளம், துடியலூர், பீளமேடு, ஆத்துபாலம், சொக்கம்புதூர், போத்தனூர், சித்தாபுதூர் உள்ளிட்ட 12 மயானங்களில் தகனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. உடல்களை தகனம் செய்ய ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே கட்டணம் பெறப்படுகிறது. வெளிநபர்களை நம்பி ஏமாற வேண்டாம். மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று கூறினார்.