கோவை: தொழில் முனைவோர் தங்கள் மின் உபயோக கட்டணத்தை செலுத்த கால அவகாசம் வேண்டி தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் தமிழ்நாடு மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் ஆகியோருக்கு கோவை காட்மா சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.

மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வேண்டுதல் தொடர்பாக காட்மா சங்கம் சார்பில் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், ‘‘கடந்த 10.05.21 முதல் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள கொரோனா இரண்டாம் அலை தடுப்பு ஊரடங்கு உத்தரவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக கோவை மாவட்டத்தில் உள்ள குறு மற்றும் சிறு தொழிற் கூடங்கள் மூடப்பட்டுள்ளன. மூடப்பட்டுள்ள தொழிற்கூடங்களுக்கான மின் கட்டணம் செலுத்த கால அவகாசம் வழங்கி தமிழக அரசால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கோவை மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள தொழில் கூடங்களுக்கான, ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான மின் உபயோக கட்டணத்தை வரும் 15.06.21 க்குள் செலுத்திவிட வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழகத்தால் தொழில் முனைவோர்களுக்கு குறுந்தகவல்கள் அனுப்பப்படுகிறது.
கொரோனா தடுப்பு ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதால், தொழில் முனைவோர் தங்கள் தொழிலை செய்ய இயலாமல் பொருளாதார ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும் இந்தச் சூழலில் தொழில் முனைவோர்களுக்கு இது மிகுந்த நெருக்கடியை உண்டாக்குவதாக இருக்கிறது.
எனவே, தொழில் முனைவோர் தங்கள் மின் உபயோகக் கட்டணத்தை செலுத்த ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்குப் பிறகு, அதிலிருந்து மூன்று மாதங்கள் கால அவகாசம் வழங்கி, தொழில் முனைவோர்களை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றி உதவுமாறு பணிவன்புடன் வேண்டிக் கொள்கிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.