திருப்பூர் பின்னலாடை தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை நிறுவனங்களே கொள்முதல் செய்து வழங்க வேண்டும்... இந்திய தொழில் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் பேட்டி

திருப்பூர்: தொழிலாளர்களின் நலன் கருதியும் தமிழக அரசின் கரங்களுக்கு வலுவூட்டும் நோக்கத்திலும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சொந்த செலவில் தங்களது தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பேட்டி.


திருப்பூர்: தொழிலாளர்களின் நலன் கருதியும் தமிழக அரசின் கரங்களுக்கு வலுவூட்டும் நோக்கத்திலும் திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் சொந்த செலவில் தங்களது தொழிலாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்து தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும் என இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் பேட்டி.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் நோயின் தாக்கம் கடந்த சில நாட்களாகக் குறைந்துள்ளது. இருப்பினும் கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு தமிழக அரசு தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. மேலும், தனியார் நிறுவனங்களும் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையடுத்து திருப்பூர் மாவட்டத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் 500 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு பூலுவப்பட்டி பகுதியில் உள்ள எஸ்டி எக்ஸ்போர்ட் நிறுவன தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டது. இதனை திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் சரவண மூர்த்தி தொடங்கி வைத்தார்.



இதுகுறித்து இந்திய தொழில் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் திருக்குமரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘‘தமிழகத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும். தமிழக அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இருப்பினும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

தற்போது தனியார் நிறுவனங்கள் தடுப்பூசிகளை கொள்முதல் செய்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே, திருப்பூர் போன்ற தொழில் நிறுவனங்கள் உள்ள மாவட்டங்கள் தங்களது தொழிலாளர்களுக்கான தடுப்பூசிகளை சொந்த செலவில் கொள்முதல் செய்து வழங்க வேண்டும். இதன் மூலம் பொதுமக்களுக்கு கிடைக்கும் தடுப்பூசிகளுக்கு பற்றாக்குறை ஏற்படாமல் தடுக்க முடியும். இதை செய்வதன் மூலம் தமிழக அரசின் கைகளுக்கு வலு சேர்க்க முடியும். எனவே, முதற்கட்டமாக திருப்பூரில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் எஸ்டி எக்ஸ்போர்ட் தொழிலாளர்கள் 500 பேருக்கு தடுப்பூசி கொள்முதல் செய்து போடப்பட்டு வருகிறது. இதனைப் பார்த்து இன்னும் சில நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களுக்கு தடுப்பூசிகளைக் கொள்முதல் செய்து வருகின்றனர்'' என்றார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...