கோவை: சிறு குறு தொழில்களின் நடப்பு கடன் தவணைகளை 6 மாத காலம் தள்ளி போட கோவை தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
கோவை: சிறு குறு தொழில்களின் நடப்பு கடன் தவணைகளை 6 மாத காலம் தள்ளி போட கோவை தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு தமிழக முதலமைச்சருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது குறித்து கோவை தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;
தம்ழகத்தில் வரும் 21ம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ள முழு ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் மட்ரும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய தொழில்களுக்கு உதிரிப்பாகங்கள் அல்லது மற்ற வேலை செய்யும் சிறு குறு தொழில்கள் இயங்க அனுமதி இருந்தாலும், வேலைக்கான கருவிகள், இடுபொருட்கள், விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டிருக்கின்றன.
தொழிலாளர்கள் இரு சக்கர வாகனங்களில் வந்து செல்ல தடை விதிக்கப்பட்டதால் சிறு குறு தொழில்கள் செயல்பட முடியவில்லை. அனைத்து பெரிய தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. ஆனால், 99 சதவீதம் சிறுகுறு தொழில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. குஜராத், மகாராட்டிரம் போன்ற மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தொழிற்சாலைகள் மூடப்படவில்லை.
கோவையில் உள்ள மோட்டார், பம்புசெட், கம்ப்ரசர்கள், ரயில்வே சாதனங்கள், முழு உபகரனங்களை செய்யும் குறு தொழிற் சாலைகள் மூடப்பட்டுள்ளதால் சந்தையை இழப்பது மேலும் அதிகரிக்கும்.தொழில் வளர்ச்சியில் தமிழகம் பின் தள்ளப்படும். சென்ற ஆண்டு கொரோனா பாதிப்பின் போதும், இன்று வரையிலும், ஏற்கனவே எந்த விதமான கடனுதவியும் பெறாத சிறு குறு தொமில் நிறுவனங்களுக்கு, எந்த ஒரு உதவி திட்டமும் அறிவிக்கப்படவில்லை.
ECLGS திட்டத்தின் கீழ் 20 சதவீத தொகையை புதிய கடனாக பெற்ற சிறு குறு தொழில் நிறுவனங்கள், அனைத்து மூலப்பொருட்களின் விலை உயர்வால், கடந்த செப்டம்பர் முதல் வாங்கிய கடன் தொகை எல்லாம் கரைந்து போய் தவிக்கின்றன, சிறுகுறு தொழில்களால் கடந்த 2 ஆண்டுகளாக தொழில் விரிவாக்கம் செய்யவோ அல்லது நலிவிலிருந்து மீளவோ முடியவில்லை. அரசாங்கத்திடமிருந்து சிறுகுறு தொழில்களுக்கு உதவி இல்லாதபோது அந்த தொழில் நிறுவனங்களை நம்பியுள்ள தொழிலாளர்களும் வாடுகின்றனர். சிறுகுறு தொழில்கள் பெரும் சீரழிவில் சிக்கும் நிலை ஏற்பட்ரூள்ளது.
தொழிற்சாலை பணிகள் நிறுத்தப்படுவதால் வேலை தொடர்ச்சி பாதிக்கப்படுகிறது. தொமில் முனைவோர்களுக்கு தொழில் செய்வதற்கான உத்வேகமும், நம்பிக்கையும் இல்லாமல் போய் விடுகின்றது. இந்த மனரீதியான இழப்பை சரி செய்ய பல மாதங்கள் ஆகும். சிறு குறு தொழில்களுக்கு புதிய நிதி உதவித்தொகை திட்டத்தை அறிவிக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தியுள்ள தமிழக முதல்வருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். பல்வேறு சிறப்பான மக்கள் திட்டங்களை அறிவித்துவரும் தமிழக முதல்வர் அவர்களுக்கு கீழ்க்கண்ட கோரிக்கைகளை முன் வைக்கிறோம்
முழு ஊரடங்கு இருந்தாலும், தொழிற் வளர்ச்சியில் முன்னேறிய குஜராத், மகாராட்டிரம் போல் சிறுகுறு தொழில்களும் தொழில் சார்ந்த கடைகளும் இயங்க அனுமதிக்க வேண்டும். தமிழக அரசின் ஊரடங்கு அறிவிக்கைகள் எல்லாவற்றிலும் தொழிலாளர்களுக்கு ஒரு மாத காலத்திற்குள் தருப்பூசி போருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சிறு குறு தொழில்களின் பணியாளர்களுக்கு, தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை கொடுக்க வேண்டும். தொழில் அமைப்புகள் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யும் போது தடுப்பூசி மருந்து ஒதுக்கீடு செய்ய வேண்டும். முக்கியமாக, இதுவரை எவ்வித கடன் உதவியும் பெறாத சிறு, குறு தொழில்களுக்கு தனிப்பட்ட திட்டத்தை அறிவிக்க மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
இதுவரை கடன் பெறாத நிறுவனங்களுக்கு குறைந்தது தலா ஒரு லட்சம் ரூபாய் கடனுதவி ஆண்டு வட்டி ஏதுமில்லாமல் வழங்கப்பட வேண்டும். சிறு குறு தொழில்களின் நடப்பு கடன் தவணைகளை குறைந்தது 6 மாத காலம் தள்ளி போட வேண்டும். ரிசர்வ் வங்கி தற்போது ECLGS திட்டத்தில் மேலும் 10 சதவீத அளவிற்கு புதிய கடன் தொகை வழங்க வங்கிகளுக்கு சிபாரிசு செய்துள்ளது. ஆனால் இந்த புதிய கடன் 46000 கோடி வரை மட்டுமே வழங்கப்படும். சென்ற ஆண்ரு 20 சதவீத கடன் தொகை பெற்ற தொமில்கள் அனைத்தும் இந்த 10 சதவீத கடன் தொகையை பெற வேண்டுமானால் ரூ.46000 கோடி போதாது.
ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் படி குறைந்த பட்சம் ரூ1.27 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்த வேண்டும். சிறு, குறு தொழில்கள் 42 நாட்கள் இயங்கவில்லை. எனவே குறைந்தது 2 மாதங்களுக்கு மின் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். தமிழக முதல்வர் மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.”
இவ்வாறு கோவை தொழிற்சங்கங்கள் கூட்டமைப்பு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.