கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ-க்களாக உருவாக்க வேண்டும்‌ என சத்குரு வலியுறுத்தல்!

கோவை: கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ-க்களாக உருவாக்க வேண்டும்‌ வர்த்தக தலைவர்களின்‌ கருத்தரங்கில்‌ சத்குரு வலியுறுத்தியுள்ளார்.


கோவை: கிராமப்புற இளைஞர்களை சி.இ.ஓ-க்களாக உருவாக்க வேண்டும்‌ வர்த்தக தலைவர்களின்‌ கருத்தரங்கில்‌ சத்குரு வலியுறுத்தியுள்ளார்.

ஈஷா லீடர்ஷிப்‌ அகாடமி சார்பில்‌ Human is not a Resource என்ற வருடாந்திர கருத்தரங்கு ஆன்லைன்‌ வாயிலாக நடைபெற்றது. இதல்‌ 11 நாடுகளைச்‌ சேர்ந்த 150 வர்த்தக நிறுவனங்களின் தலைவர்கள்‌ பங்கேற்றனர்‌.

இந்த வர்த்தக கலந்துரையாடலில்‌ சத்குரு பேசியதாவது:

“உலகம்‌ முழுவதும்‌ உள்ள தொழில்‌ முதலீடுகளில்‌ பெரும்‌ பகுதி 25 முதல்‌ 30 முக்கிய நகரங்களில்‌ மட்டுமே முதலீடு செய்யப்படுகிறது. இகனால்‌, 160 கோடி (1.6 பில்லியன்‌) மக்கள்‌ வேலை வாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர வேண்டி உள்ளது. மக்கள்‌ எங்கு வாழ்கிறார்களோ, அங்கு தான்‌ தொழில்‌ வளர்ச்சி நடக்க வேண்டும்‌. தொழில்‌ வளர்ச்சிக்காக மக்களை இடம்பெயர்ச்சி செய்வது சரியான முறை அல்ல.

எனவே, இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண, கிராமப்பறங்களில்‌ தொழில்‌ வாய்ப்புகளை அதிகளவு உருவாக்க வேண்டும்‌. அதற்கு, தொழில நிறுவனங்கள் தங்கள் மொத்த முதலீட்டில் குறைந்தப்பட்சம்‌ 10 முதல்‌ 15 சதவீதத்தையாவது கிராமங்களில்‌ முதலீடு செய்ய வேண்டும்‌. தொழில்‌ துறையின்‌ தேவைக்கேற்க அந்தந்த கிராமங்களில்‌ வணிக நிறுவனங்கள் மூலம்‌ திறன்‌ மேம்பாட்டு பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்‌.

அவர்களுக்குள்‌ மறைந்து இருக்கும்‌ திறமைகளை கண்டறிந்து நிறுவனங்களின் சி.இ.ஓ-க்களாக உயரும்‌ அளவிற்கு அவர்களை வளர்த்தெடுக்க வேண்டும்‌. மனிதர்களின்‌ அனைத்து செயல்பாடுகளிலும்‌ மனித தன்மை கொண்ட இதுபோன்ற அம்சங்கள்‌ மிகவும்‌ அவசியம்‌.”

இவ்வாறு சத்குரு கூறினார்‌.

வேலைவாய்ப்பிற்காக நகரங்களுக்கு இடம்பெயர்ந்த கோடிக்கணக்கான மக்கள்‌ கொரோனா காலத்தில்‌ சந்தித்த அவலங்கள்‌ இங்கு நினைவு கூறத்தக்கது. சத்குரு கூறுவது போல்‌, கிராமப்புறங்களில்‌ தொழில்‌ வாய்ப்புகளை விரிவுப்படுத்துவதன்‌ மூலம்‌ இதுபோன்ற துயரங்களையும்‌, இழப்புகளையும்‌ நம்மால்‌ குறைக்க முடியும்‌.

முன்னதாக, இந்த 3 நாள்‌ ஆன்லைன்‌ கலந்துரையாடல்‌ நிகழ்வில்‌, தென்‌ மேற்கு பிராந்தியத்தின்‌ முன்னாள்‌ ராணுவ தளபதி லெப்டினெண்ட்‌ ஜெனரல்‌. அலோக்‌ லேர்‌, இண்டிகோ நிறுவனத்தின்‌ மூத்த துணை தலைவர்‌ ராஜ்‌ ராகவன்‌ உள்ளிட்ட வர்த்தக தலைவர்கள்‌ பங்கேற்று உரை நிகழ்த்தினர்‌.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...