கோவை: கோவை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழை காரணமாக வால்பாறையில் உள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

கோவை மாவட்டம் வால்பாறையில் பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தின் பிரதான அணையான சோலையாறு அணை உள்ளது. கடந்த ஒரு வார காலமாக வால்பாறை பகுதியில் மழை பெய்து வருகிறது. சோலையாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியான மேல் நீரார் மற்றும் கீழ் நீரார் பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் இரண்டு அடி நீர் மட்டுமே இருந்த நிலையில், இன்று கிடுகிடுவென உயர்ந்து 53 அடியாக உயர்ந்துள்ளது.
இன்று காலை 6 மணி நிலவரப்படி மேல் நீரார் அணையில் 81 மி. மீட்டர் மழையும் கீழ் நீரார் அணையில் 60.மி.மீ. மழையும் சோலையாறு அணைப் பகுதியில் 40 மி.மீ மழையும் வால்பாறை நகரில் 46 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சோலையாறு அணைக்கு 960 கனஅடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து மின் உற்பத்திக்காக 429.53 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. 165 அடி உயரமுள்ள அணையின் நீர்மட்டம் 53.10 அடியாக உள்ளது. தொடர்ந்து வால்பாறை பகுதியில் மழை பெய்து வருவதால், சோலையாறு அணை விரைவில் நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுப்பணித் துறையினர் அணையை கண்காணித்து வருகின்றனர்.