பொள்ளாச்சி: கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார் வந்ததையடுத்து, பொள்ளாச்சியை அடுத்த செம்மணாம்பதி தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் உள்ள மலை அடிவாரப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறதா என்பதை மதுவிலக்கு போலீஸார் ட்ரோன் கேமரா மூலம் கண்காணித்தனர்.

தமிழகம் முழுவதும் தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு இருந்தன. இன்று முதல் டாஸ்மாக் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ளதால் மதுக் கடைகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதேபோல கேரள மாநிலத்தில் முழு ஊரடங்கு காரணமாக மதுக்கடைகள் மூடப்பட்டு உள்ளன. இந்தநிலையில், பொள்ளாச்சியை அடுத்த தமிழக கேரள எல்லைப் பகுதியான செம்மணாம்பதியில் வனப்பகுதி அருகே கள்ளச் சாராயம் காய்ச்சப்படுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தர்ராஜ் தலைமையில் ஆய்வாளர் பாலமுருகன், உதவி ஆய்வாளர்கள் சின்னக்காமணன் உள்ளிட்ட போலீஸார் அடங்கிய தனிப்படையினர் செம்மணாம்பதி பகுதியில் உள்ள வனப்பகுதியில் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அந்தப் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படவில்லை என்பது தெரியவந்தது.

இருப்பினும் தமிழக கேரள எல்லைப் பகுதியான கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மதுவிலக்கு போலீஸார் தெரிவித்தனர்.