செயல் அதிகாரி மீது கோவை இளம் தொழில் முனையும் பெண் பரபரப்பு பாலியல் புகார்..!

கோவை: செயல் அதிகாரி மீது கோவை இளம் தொழில் முனையும் பெண் பரபரப்பு பாலியல் புகார் அளித்துள்ளார். திருமணமாகி கணவனை பிரிந்த பெண்களை குறிவைத்து பணம் பறித்து, உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: செயல் அதிகாரி மீது கோவை இளம் தொழில் முனையும் பெண் பரபரப்பு பாலியல் புகார் அளித்துள்ளார். திருமணமாகி கணவனை பிரிந்த பெண்களை குறிவைத்து பணம் பறித்து, உல்லாசம் அனுபவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவையில் இளம் பெண் தொழில் முனைவர் நேற்று கோவை மாநகர கமிஷனரிடம் ஒரு புகார் மனு அளித்தார். அதில், செயல் அலுவலராக இருக்கக் கூடிய நபர் ஆன்லைன் மூலமாகத் தொடர்பு கொண்டு திருமண ஆசை கூறி பலமுறை உல்லாசம் அனுபவித்ததாகவும் தொடர்ந்து அவர் நடவடிக்கைகளைக் கண்காணித்தபோது பத்துக்கும் மேற்பட்ட பெண்களோடு தொடர்பு இருப்பதாகவும் அவர் மீது பாலியல் நடவடிக்கை எடுக்கும்படி மனு அளித்து புகாரில் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவை உப்பிலிபாளையத்தில் வசிக்கும் 47 வயது பெண் தொழில் முனைவர் ஒருவர், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் கணவரை பிரிந்து வாழும் தமக்கு ஆன்லைன் டேட்டிங் மூலம் சென்னை முகப்பேர் கிழக்கில் வசிக்கும் 49 வயது ஆனந்த் சர்மா நண்பராக அறிமுகமானதாகத் தெரிவித்துள்ளார். மனைவியைப் பிரிந்து வாழ்வதாகக் கூறிய ஆனந்த் சர்மா பெண் தொழில் முனைவரை திருமணம் செய்ய முன்வந்ததால் இருவர் இடையே நெருக்கம் அதிகரித்தது.

கடந்த செப்டெம்பர் 20ஆம் தேதி கோவை ரேஸ் கோர்ஸ் பகுதியில் உள்ள ஓட்டல் ஒன்றில் வைத்து ஆனந்த் சர்மாவை பெண் தொழில் முனைவர் சந்தித்துள்ளார். அப்போது தம்மை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார். அதற்காக, ஆனந்த் சர்மாவே கடிந்துகொண்ட போது, 13 ஆண்டுகளாக தமது மனைவியுடன் தொடர்பு இல்லாததால் உணர்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் தவறு இழைத்துவிட்டதாக தெரிவித்து மன்னிப்பு கோரினார். அது வெறும் நடிப்பு என்பது தமக்கு பின்னர்தான் தெரிய வந்ததாகவும் அந்தப் பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

தன்னைப் போன்றே பிற பெண்களுடன் ஆனந்த் சர்மாவுக்கு இருந்த தொடர்பை அந்தப் பெண் அம்பலப்படுத்தியுள்ளார். பிசினஸ் விசிட் என்ற பெயரில் வெளியிடங்களுக்கு செல்வதாகக் கூறிவிட்டு வெவ்வேறு பெண்களுடன் ஆனந்த் சர்மா வலம் வந்தது தொடர்பான ஆவணங்களையும் போலீசில் ஒப்படைத்துள்ளார். அந்தப் பெண்களும் ஏதோ ஒரு வகையில் கணவரைப் பிரிந்து வாழ்வபர்கள்தான் என்றும் கோவை பெண் கூறியுள்ளார்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...