கோவை: சமூக வலைத்தளங்களில் பல்வேறுவிதமான பணமோசடிகள் நடைபெறுவது அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த ஆபத்துகளாகும். அவ்வகையில், கோவையில் வருமான வரித்துறை அதிகாரி பெயரில் வாட்ஸ் அப் எண்ணிற்கு மெசேஜ் அனுப்பி பணமோசடி செய்ய முயற்சி நடந்துள்ளது.

பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள காளிபாளையத்தைச் சேர்ந்தவர் அன்புச்செல்வம் வயது 40, இவருடைய வாட்ஸ் -அப் எண்ணுக்கு நேற்று ஒரு மெசேஜ் வந்தது. அதில், தான் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை அதிகாரி என்றும் முகநூல் நண்பர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும், தனக்கு அவசரமாக ரூபாய் 7,000 தேவைப்படுவதால் உடனடியாக அனுப்பி வைக்குமாறும் அந்தப் பணத்தை நாளை(இன்று) காலை கொடுத்து விடுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உடனே, அன்புச்செல்வன் அந்த எண்ணுக்குத் தொடர்பு கொண்டு பேச முயன்றார். ஆனால், அது முடியவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் தனது முகநூலில் உள்ள அந்த நபரின் பக்கத்தை எடுத்துப் பார்த்தபோது அது போலியானது என்றும் இதுபோன்ற அதே பெயரில் பலரிடம் பணம் கேட்டு மெசேஜ் அனுப்பப்பட்டிருந்தது. வருமான வரித்துறை அதிகாரி பெயரில் மோசடி செய்ய முயற்சி நடந்தது தெரியவந்தது. உடனே, அவர் சம்பந்தப்பட்ட ஓய்வுபெற்ற வருமான வரித்துறை அதிகாரியைத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். மேலும், இதுதொடர்பாக போலீஸில் புகார் செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.