கோவையில் இருந்து 13 நாட்களில் 13 டன் காய்கறி, பூக்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி!

கோவை: கோவையில் இருந்து 13 நாட்களில் வாழை, கோவக்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட 13 டன் காய்கறி, பூக்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.


கோவை: கோவையில் இருந்து 13 நாட்களில் வாழை, கோவக்காய், கத்திரிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட 13 டன் காய்கறி, பூக்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.

கோவை - ஷார்ஜா இடையே ஜூன் 1 முதல் வாரம் ஒரு விமானம் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. கோவையில் இருந்து காய்கறி மற்றும் பூக்கள் இந்த விமானத்தில் அதிக அளவு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இது குறித்து ஏர்போர்ட் வட்டாரங்கள் கூறியதாவது," கோவையிலிருந்து சிங்கப்பூர், இலங்கை மற்றும் ஷார்ஜாவுக்கு விமான சர்வீஸ் வழங்கப்பட்டு வந்தது.

கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது ஷார்ஜாவுக்கு மட்டும் அந்நாட்டின் ஏர்லைன்ஸ் நிறுவனமான 'ஏர் அரேபியா' சார்பில் கோவைக்கு விமான சர்வீஸ் வழங்கப்படுகிறது.

வாரத்தில் 3 நாட்கள் வரை சர்வீஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில் படிப்படியாக குறைந்து தற்போது வாரம் ஒரு சர்வீஸ் மட்டுமே வழங்கப்படுகிறது.

ஜூன் 1 முதல் ஜூன் 15 வரை இரண்டு வாரங்களுக்கு இரண்டு விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் என 'ஏர் அரேபியா' நிறுவனம் அறிவித்தது. இதன்படி இன்று வரை இரண்டு விமானங்கள் இயக்கப்பட்டுள்ளன.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு விமானத்தில் பயணிகளுக்கு அனுமதி உண்டு. ஆனால் திரும்பி செல்லும்பொழுது கார்கோ கொண்டு செல்ல மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக வழக்கத்தைவிட அதிக கார்கோ புக்கிங் செய்யப்பட்டு இந்த விமானங்களில் கொண்டு செல்லப்படுகின்றன. ஜூன் 1 முதல் ஜூன் 13 இன்று வரை இயக்கப்பட்டுள்ள இரண்டு விமானங்களில் மொத்தம் 13 டன் கார்கோ கொண்டு செல்லப்பட்டுள்ளன.

காய்கறிகள் மற்றும் பூக்கள் மட்டுமே அதிக அளவில் புக்கிங் செய்யப்படுகின்றன. குறிப்பாக வாழைப்பழம், கோவக்காய், கத்தரிக்காய், கொத்தவரங்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிக புக்கிங் செய்யப்படுகின்றன.

தவிர ஒவ்வொரு முறையும் 1 டன் எடையிலான பூக்களும் புக்கிங் செய்யப்பட்டு விமானத்தில் கொண்டு செல்லப்படுகின்றன” இவ்வாறு, ஏர்போர்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...