திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 70 லட்சம் மதிப்பீட்டில் தன்னார்வலர்கள் உதவியோடு அமைக்கப்பட்ட ஆக்சிஜனை உற்பத்தி மையத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் 70 லட்சம் மதிப்பீட்டில் தன்னார்வலர்கள் உதவியோடு அமைக்கப்பட்ட ஆக்சிஜனை உற்பத்தி மையத்தை செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்தார்.
திருப்பூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வந்த சூழ்நிலையில் ஆக்சிஜன் வசதி தேவைப்படுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தது.
இதற்காக மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்த சூழ்நிலையில் கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்தது.
இந்த நிலையில் திருப்பூர் மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியிலேயே யங் இந்தியன்ஸ் மற்றும் சி.ஐ.ஐ அமைப்பு சார்பாக 70 லட்சம் மதிப்பீட்டில் 350 லிட்டர் கொள்ளளவு கொண்ட ஆக்சிஜன் உற்பத்தி மையத்தை அமைத்து இருந்தனர்.
அதனை இன்று செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் திறந்து வைத்து பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழ்நாட்டில் முதல்வரின் தடுப்பு நடவடிக்கைகளால் தொற்று பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில் 2000த்திற்கும் மேல் இருந்த தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 800 அளவுக்குக் குறைந்துள்ளது.
தன்னார்வலர்கள் உதவியோடுதான் இது சாத்தியப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” எனவும் கேட்டுக் கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியர் சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.