கோவை: கட்டுமான பொருட்களை அத்தியாவசிய சட்டத்தின் கீழ் கொண்டு வந்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைப்பு சாரா தொழிலாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்ட அண்ணா கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர், முருகேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டு வளமான வளர்ச்சிக்கான பாதையை நோக்கி செல்ல கட்டுமானத் துறை மற்றும் ரியல் எஸ்டேட் துறையை வலுப்படுத்த வேண்டும்.
அதன் மூலம் கட்டுமான துறையை நம்பி இருக்கும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக எந்த ஒரு காரணமும் இல்லாமல் கட்டுமான பொருட்களின் விலை தாறுமாறாக அதிகரித்துள்ளது. இதைப் பயன்படுத்தி ஒரு சிலர் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
கட்டட வரைபட அப்ரூவல் மற்றும் பத்திரப்பதிவிலுள்ள குளறுபடிகள், நியாயமான காரணமின்றி பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவற்றால் கட்டுமான அமைப்பு சாரா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதை உணர்ந்த முதல்வர் ஸ்டாலின், திமுக தேர்தல் அறிக்கையில், கட்டுமானப் பொருட்களின் விலை அத்தியாவசிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும் என கூறியிருந்தார்.
பத்திரப்பதிவு சீர் செய்யப்படும் என்றும் வணிக வளாகம், தொழிற்சாலை, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஒற்றை சாளர முறையில் 60 நாட்களுக்குள் அப்ரூவல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
ஆட்சி பொறுப்பேற்ற நாள் முதல் வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி முதல்வர் ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார். அதன்படி கட்டுமானத் துறையின் கோரிக்கையையும் நிறைவேற்ற வேண்டும்.”
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.