பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியில் இறைச்சி கடைகளில் சமூக இடைவெளியை பின்பற்றாததால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. பொதுமக்கள் நலன் கருதி அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள், இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பொள்ளாச்சியில் அனைத்து இறைச்சிக் கடைகளும் திறக்கப்பட்டன. இதையடுத்து இறைச்சி வாங்க பலர் குவிந்தனர். ஆனால், இறைச்சி கடைகளுக்கு முன்பு அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி சமூக இடைவெளியை அடையாளப்படுத்தும் கோடுகள் அமைக்கப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் கூட்டமாக நின்று இறைச்சிகளை வாங்கிச் சென்றனர். சமூக இடைவெளியை பின்பற்றாத கடைகளை கண்காணிக்க வருவாய் துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது.
ஆய்வு குழுவினர் பொள்ளாச்சியில் முறையாக ஆய்வு செய்யவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். கோவை மாவட்டத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.