வால்பாறை: வால்பாறையை சுற்றி சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகன சோதனை நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அப்போதுதான் அவர்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்வது வழக்கம்.

இதையடுத்து இன்று கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கூட்டம் நெரிசலை குறைக்க வால்பாறையை சுற்றியு நான்கு புறங்களிலும் புது தோட்டம் சாலை, நடுமலை சாலை, சிறுகுன்றா சாலை, ஷ்டேன்மோர் சாலை ஆகிய பகுதிகளிலும் சோதனை சாவடி அமைக்கப்பட்டு வாகன தணிக்கை நடைபெற்றது.

நடுமலை சாலை பகுதியில் நகராட்சி நிர்வாகம் சார்பாக ஆணையாளர் சுரேஷ்குமாரின் உத்தரவின் பேரில் நகராட்சி ஊழியர்கள் காவல்துறையினர் இணைந்து வாகனங்களை தணிக்கை செய்தனர்.
எஸ்டேட் பகுதிகளில் இருந்து வால்பாறைக்கு வரும் வாகனங்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படவில்லை. வாகனங்களை சோதனைச் சாவடி முன்பே நிறுத்தப்பட்டன.
வாகனங்களில் வருபவர்கள் அங்கிருந்து நடந்து வந்து வால்பாறை நகருக்கு அத்தியாவசியமான பொருட்களை வாங்கி செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.