கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிவாசிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண உதவி!

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி பழங்குடி கிராமங்களுக்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், பொள்ளாச்சி தமிழ் நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம் ஆகியவை இணைந்து ரூ.3 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவி அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள ஆதிவாசி பழங்குடி கிராமங்களுக்கு தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கம், பொள்ளாச்சி தமிழ் நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர்கள் சங்கம், பொள்ளாச்சி, புத்தர் குடில் அறக்கட்டளை ஆகியவை இணைந்து ரூ.3 லட்சம் மதிப்பில் கொரோனா நிவாரண உதவி அளித்தனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி, வால்பாறை, காரமடை, சேத்து மடை போன்ற பகுதிகளில் ஆதிவாசி பழங்குடியினர் சுமார் பத்தாயிரத்துக்கும் மேல் வாழ்ந்து வருகிறார்கள்.

ஆதிவாசி மக்கள் வாழும் கிராமங்கள் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் அவர்கள் வனப்பகுதியை விட்டு வெளியேறி மளிகை உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்களை வாங்கி செல்ல முடியாத சூழ்நிலை உள்ளது.



கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் கோவை மாவட்ட பொள்ளாச்சி தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக சங்கமும் இணைந்து அடர்ந்த வனப்பகுதியில் உள்ள ஆதிவாசி பழங்குடியினர் கிராமங்களுக்குச் சென்று கொரோணா நிவாரண பொருள்கள் வழங்கி வருகின்றனர்.



காரமடை, வெள்ளிங்காடு, பில்லூர், எழுத்து புதூர்,மேல் குறவன் கண்டி, கூடப் பட்டி, இனமக்கள் வசிக்கும் பொட்டப் பதி/வெள்ள பதி/சர்க்கார் போதி சேத்துமடை, நாகரூத்து, சர்க்கார் பதி, வால்பாறை உடுமன் பதி, கல்லாககுடி காடம்பாறை, வெள்ளி முடி செட்டில்மெண்ட் ஆகிய பகுதிகளை சேர்ந்த மக்களுக்கு தேவையான காய்கறி, அரிசி, மளிகை பொருட்கள், கபசுர குடிநீர் மற்றும் முகக் கவசம் வழங்கினர்



கோவை மாவட்டத்தில் உள்ள 18 பழங்குடியின கிராம மக்களில் 243 குடும்பங்களுக்கு 3 லட்சம் மதிப்பில் அவர்கள் வீட்டுக்கு தேவையான பொருட்களை வழங்கினர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...