கோவையில் கல்வி கட்டணம் கட்டச்சொல்லி தனியார் கல்வி நிலையங்கள் நிர்ப்பந்தம்... மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கம் புகார்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவையில் கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி தனியார் கல்வி நிலையங்கள் நிர்ப்பந்தம் செய்வதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், கோவையில் கல்விக் கட்டணம் கட்டச்சொல்லி தனியார் கல்வி நிலையங்கள் நிர்ப்பந்தம் செய்வதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்கங்கத்தினர் புகார் அளித்துள்ளனர்.

கல்வி நிலையங்கள் திறக்காத நிலையில் தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை கட்டச்சொல்லி நிர்ப்பந்திக்கிறது. ஊரடங்கின் காரணமாக வேலை, வருவாய் இன்றி இருக்கும் நிலையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை மனவுளைச்சலுக்கு உள்ளாக்கும் தனியார் கல்வி நிலையங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கம் கோவை மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர் நிசார், செயலாளர் தினேஷ் ராஜா ஆகியோர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், ‘‘கொரோனா பெருந்தொற்று இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. முழு ஊடரங்கு அமலில் உள்ளதால் வேலை இன்றி மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகிறார்கள். இந்த பேரிடர் கால கட்டத்திலும்கூட கோவையில் உள்ள பல்வேறு தனியார் பள்ளி, கல்லூரிகள் கட்டணத்தை கட்டச்சொல்லி மாணவர்களை நிர்ப்பந்திக்கின்றனர். குறிப்பாக விஎல்பி, பிஎஸ்ஜி, ரத்தினம் கல்லூரி, மைக்கேல் ஜாப் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி, ஆர்விஎஸ், அமிர்த வித்யாலயம், சென் ஜோசப் பள்ளி உள்ளிட்ட தனியார் பள்ளி, கல்லூரிகள் மாணவர்களை தேர்வுக் கட்டணம் மற்றும் பருவக் கட்டணம் கட்டச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். தொடர்ச்சியாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் செல்போனுக்கு குறுஞ்செய்தி அனுப்புவதோடு, தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கட்டணம் கட்ட சொல்லி வற்புறுத்துகிறார்கள். கட்டணம் செலுத்தவில்லை என்றால், மாணவர்களைத் தேர்வு எழுத அனுமதிக்க மாட்டோம் என்று மிரட்டல் விடுக்கின்றனர். இதனால் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மன உளைச்சல் ஏற்படுகிறது.

தனியார் கல்லூரிகளின் இந்தப் போக்கினை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. மாணவர் சங்கத்தின் இணையதள பக்கத்தில் பல்வேறு மாணவர்கள் கட்டணம் குறித்து புகார் அளித்துள்ளார்கள். அதன் நகலை இந்தப் புகாரோடு இனைத்துள்ளோம். பள்ளி, கல்லூரி திறப்புகள் மற்றும் தேர்வு சம்பந்தமாக எந்த ஒரு அறிக்கையும் தமிழக அரசு இதுவரை வெளியிடவில்லை. இந்த நேரத்திலும்கூட கோவையில் உள்ள தனியார் கல்லூரிகள், பள்ளிகள் மாணவர்களை தொடர்ச்சியாக தொடர்புகொண்டு கட்டணம் கட்டச் சொல்லி வற்புறுத்துவது ஏற்க முடியாத செயலாகும்.. ஆகவே, உடனடியாக கோவை மாவட்ட ஆட்சியர் தலையிட்டு மாணவர்களிடம் கட்டணம் வசூல் செய்யும் பள்ளி, கல்லூரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளின் நடவடிக்கைகளைக் கண்காணிக்கக் குழு அமைக்க வேண்டும்'' என அதில் தெரிவித்துள்ளார்கள்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...