கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை: முதியோர் இல்லங்களில் தீவிர கண்காணிப்பு..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள முதியோர் இல்லங்களில் முதியோர்களுக்கு தினமும் காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் 30-க்கும் மேற்பட்ட முதியோர் இல்லங்கள் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இந்த முதியோர் இல்லங்களில் 1200-க்கும் மேற்பட்ட முதியோர்கள் தங்கியுள்ளனர். மகன், மகள், உறவினர்கள் போன்றவர்களால் கைவிடப்பட்டவர்களும், தனிமையில் வசித்தவர்களும் என ஆதரவற்ற முதியோர்கள் தான் இந்த இல்லங்களில் பெரும்பாலும் உள்ளனர்.

கொரோனா பெருந்தொற்றுப் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியோர்களை கண்காணிக்கும் விதமாக மாவட்டத்தில் சமூக நலத்துறையின் கீழ் உள்ள 30 முதியோர் இல்லங்களில் உள்ள முதியோர்களுக்கு கொரோனா பெருந்தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், அவர்களுக்கு தினமும் காய்ச்சல் உள்ளதா? என வெப்ப அளவு பரிசோதனையும் செய்யப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ‘முதியோர் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று முதியோர்களிடம் கொரோனா பெருந்தொற்றுத் தொடர்பான விழிப்புணர்வை அளித்து வருகிறோம். காய்ச்சல் பரிசோதனைகள் மேற்கொள்வதுடன் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஜிங் போன்ற விட்டமின் மாத்திரைகள் மருத்துவரின் பரிந்துரைப்படி வழங்கப்படுகிறது’ என்றனர்.

Newsletter

பீளமேடு பகுதியில் டெங்கு விழிப்புணர்வு; குழாய் பழுதுபார்ப்பு மற்றும் குப்பை சேகரிப்பு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை...

Tamil Nadu Broiler Chicken Traders to Suspend Sales Indefinitely from July 31

The Tamil Nadu Chicken Traders Federation has announced an indefinite suspension of broiler chicken sales from July 31 a...

தமிழகம், புதுச்சேரியில் ஜூலை 31 முதல் கறிக்கோழி விற்பனை நிறுத்தம்; வணிகர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் அறிவிப்பு

கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்களின் தீவனக் கட்டுப்பாட்டு நடைமுறையால் எடை மோசடி மற்றும் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக குற்றம்ச...

நெகமம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

நெகமம் துணை மின் நிலையத்தில் ஜூலை 28ம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், காலை 9 மணி முதல் மாலை 4 மணி...

சின்னத்தடாகம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை

சின்னத்தடாகம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவ...

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் நாளை (28.07.2026) மின்தடை அறிவிப்பு

கோவை ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 4 ம...